Wednesday, December 30, 2009

I Need Some Help - So Cute

Tuesday, December 22, 2009

கிச்சடி - 22/12/09

பேட்ரிக் பட்டேர்சன் பந்துல தொடர்ச்சியா மூணு பவுண்டரி அடிச்சுட்டு , நாலாவது பந்தையும் அடிச்சி அவுட் ஆனபோது ஸ்ரீகாந்தை எப்படியெல்லாம் திட்டினேன்னு இன்னும் ஞாபகம் இருக்கு. இப்ப என்னவோ நாலு / ஆறுன்னாலே ஒரே அலர்ஜியா இருக்குங்க. எதை ஞாபகம் வச்சிக்கறது எதை மறக்கறது ?

முதல்முறையா தீபாவளி எங்க வீட்டுல கொண்டாடாம உறவினர் வீட்டுக்கு போனது எந்த வருஷம்ன்னு ஞாபகம் இல்லை. ஆனா வெடி வெடிச்சுட்டு மேட்ச் பார்த்தது நல்லாவே நினைவுல இருக்கு. ஸ்ரீகாந்த் ரப்பர் சோல் உள்ள ஷூ போட்டுக்கிட்டு ஸ்லிப் ஆகி விழுந்து ரன் அவுட் ஆனார்ன்னு ஞாபகம் இருக்கு. அவருக்கு பிறகு வந்தவங்க எப்படி ஒன் டே மேட்ச் விளையாடக்கூடாதுன்னு பாடம் எடுத்தது ஞாபகம் இருக்கு. இம்ரான் கபிலை வெளுத்து வாங்கினது மறக்கலை. அமர்நாத் அவரோட ஸ்பெல்ல கடைசி ஓவர் போட வரும்போது இன்னிக்கு இவனுக்கு லக் இல்லை. ரெண்டு தான். அதுக்கு மேல சான்ஸ் கிடையாதுன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. பக்கத்துல இருந்தவன் திரும்பி பார்த்து முறைச்சது ஞாபகம் இருக்கு. முதல் ஒன்பது ஓவர்ல ஒரு விக்கெட் எடுத்திருந்தாரா இல்லாட்டி விக்கெட் எதுவும் எடுக்கலையான்னு ஞாபகம் இல்லை.

முதல்முறையா BSRB எக்ஸாம் எழுத காவேரி காலேஜ் போன சமயத்துல மனோஜ் பிரபாகரும், மோங்கியாவும் (WI எதிரா) சிறப்பா விளையாடி இந்தியாவை காலி பண்ணினாங்கன்னு ஞாபகம் இருக்கு.

என்னோட கல்யாணத்தன்னிக்கு எந்த கிரிக்கெட் மேட்சும் நடக்கலைன்னு ஞாபகம் இருக்கு :)-

வாசிம் அக்ரமோட முதல் ஸ்பெல்லை சச்சின் டெண்டுல்கர் அடிச்சி ஆடின்னா கடுப்பு கடுப்பா வரும். ரெண்டு /மூணு ஓவர்ல ஸ்பெல் முடிச்சிக்கிட்டு மறுபடியும் (சச்சின் அவுட் ஆனபிறகு) வந்து கழுத்தறுப்பார்ன்னு பயம் தான் காரணம். இப்ப கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது மாதிரி எந்த பவுலர் கிட்ட பயம் ? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.

ஹைஸ்கோருக்கு காரணம் பேட்ஸ்மன் திங்கிங்ல ஏற்பட்ட paradigm shift தான் காரணம்ன்னு புரிஞ்சாலும் ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.

2003 ல ஜெர்மனி வந்து ஒரே மாசம் தான் முடிஞ்சி இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியா டூர் நடந்துக்கிட்டு இருந்தது. ஏதோ ஒரு சேனல் கார்டு வாங்கி போட்டு அடிலைட் டெஸ்ட் மேட்ச் பார்த்தேன். கலக்கல் மேட்ச். அடுத்த மெல்போர்ன் மேட்ச் நண்பர்களோட பார்க்கனும்ன்னு டக்குன்னு ஒரு டிக்கெட் வாங்கி கிறிஸ்துமஸ் போது திருச்சி வந்தேன். இப்ப பையனை பார்க்கனும்ன்னு ஆசை ஆசையா இருந்தாலும் வேலை / விசா காரணங்களால வரமுடியலை. கலியுகத்துல பண்ணின பாவத்துக்கு அந்த ஜென்மத்துலயே பலனை அனுபவிக்கனும் போல !

Serie A லீக் ரொம்ப பார்த்தது கிடையாது. ஆனா ஸ்வீடன் மேட்ச்ல Zlatan Ibramovich விளையாடினதை பலமுறை பார்த்து இருக்கேன். வெறும் ஹைப் தான்ன்னு நண்பர்கள் கிட்ட சொல்லி இருக்கேன். பட், இப்ப Barca மேட்ச் பார்க்கும்போது தான் தெரியுது, ஏன் எல்லாரும் தலைமேல வச்சி கொண்டாடினாங்கன்னு ! Pure Class.

டால்மியா மாதிரி ஒரு ஆளு நம்ப வூரு கால்பந்து நிர்வாகத்துக்கு வந்தா நல்லா இருக்கும். (கமர்ஷியளைஸ் பண்ணிட்டாருன்னு பின்னாடி திட்டிக்கலாம் !) இந்தியாவுல கால்பந்துக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பயங்கர அதிகம். oliver kahn பார்வெல் மேட்ச் பார்க்க கல்கத்தாவுல ஒரு லட்சத்துக்கு அதிகமானவங்க stadium வந்திருந்தாங்க !

ட்விட்டர் கொஞ்சம் ஈசியா இருக்கறதுனால ஒரு மூணு வாரமா ப்ளாக் ரொம்ப படிக்கலை. எந்த வலைப்பக்கத்தை திறந்தாலும் ஒண்ணு சாரு இல்லாட்டி வேட்டைக்காரன். ரெண்டுலயும் சுவாரசியம் போயிடிச்சு. சோ, மறுபடியும் ப்ளாக் எழுதனும்ன்னு வலுக்கட்டாயமா ஆரம்பிச்சா ஸ்போர்ட்ஸ் மேட்டர் தான் மனசுல தோணுது. சோ, ரொம்ப கஷ்டப்பட்டு கீழ்வருபவன.

ஒரு மொழில ஒரே அர்த்தம் கொடுக்கற பல சொற்கள் இருக்கும் காரணம் என்ன ? குருதி, இரத்தம் (ரத்தம்) ஏன் ?

empathy ங்கர ஆங்கில சொல்லை தமிழ்ல நேரடியா மொழிபெயர்க்க முடியுமா ? பல ஆன்லைன் டிக்ஷ்ணரில பச்சாதாபம்ன்னு எழுதி இருக்கு. பட், எனக்கு திருப்தி இல்லை.

ஒரு நம்பிக்கை முட்டாள்த்தனமா இருந்தா மூடநம்பிக்கை ஆகுதா இல்லாட்டி மூடர்களோட நம்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை ஆகுதா ?

எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது, கைரேகை, கிளி ஜோசியம் ஆகியவையில் நம்பிக்கை கிடையாது. நாடி ஜோதிடம் / எனர்ஜி transformation போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கை குறித்து தெரியவில்லை. ஆனால் பிள்ளையார், முருகன் மற்றும் சிங்கபெருமாளிடம் நம்பிக்கை உண்டு. பேய்களில் உள்ள அனைத்து classification மீதும் நம்பிக்கை கிடையாது.

தமிழ்நாட்டில் வசிக்கும் வரை மார்கழி மாதம் என்றால் குளிரும் என்றும் நம்பினேன்.

எனது நம்பிக்கைகளின் அடிப்படையில் என்னை எப்படி வகையறுக்கவேண்டும் ?

Monday, December 21, 2009

மார்கழி

அழகழகான வடிவங்கள். நேர்கோடாக, சுழிசுழியாக, வளைவாக

மெலிதான குளிர். குறுக்கும் நெடுக்குமாக, குனிந்தும் எம்பியும் வடிவத்தை சமன் செய்யும் பெண்கள்.

விதவிதமான வண்ணங்கள், கலர்பொடிகளின் எல்லைக்கு உட்பட்டு.

எண்ணங்களின் பிரதிபலிப்பாக, அழகியலின் அளவுகோளாக, கற்பனையின் எல்லையாக.

நைட்டியின் மேல் துண்டோடு, வெளிர்நீல சுடிதாரோடு

சாணத்திற்கு நடுவில் செம்பருத்தியும், சூரியகாந்தியும்.

தலையை துவட்டியபடியே, புத்தம் புதிதாக, வாசனையாக அருகில் வந்தமரும் எனது மனைவி.

என்னடா செல்லம் யோசிச்சிக்கிட்டு இருக்க ? விழித்தெழுப்பிய அவளது குரல்.

இல்லடி. மழை சோன்னு கொட்டினா எப்படி இருக்கும் !

Tuesday, December 1, 2009

ப்ளாக்கர் அக்கௌன்ட் முடக்கப்பட்டால் / முடக்கப்படுவதற்கு முன் என்ன செய்யலாம் ?


உண்மையில் முடக்கப்பட்ட அக்கௌன்ட்டை எப்படி திரும்பப் பெறுவது என்பது எனக்கும் தெரியாது.ஆனால் கூகுளிடம் மெயில் செய்து கேட்டால்
திரும்பக்கிடைக்கும் என்றே நினைக்கிறேன். பலருக்கும் இவ்வாறு திரும்ப கிடைத்திருக்கிறது.

வரும்முன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் கீழ்வருபவன !

உங்கள் தளம் மால்வேர் மூலம் தாக்கப்பட்டால் மால்வேர் எங்கிருந்து வருகிறது / எப்படி நீக்குவது என்பதெல்லாம் கணிப்பொறி / மென்பொருள் அறிமுகம் உள்ளவர்களால் தான் எளிதாக செய்ய முடிகிறது.

இந்த சூழ்நிலையில் உங்கள் வலைப்பதிவில் உள்ள contents யை எளிதாக தக்கவைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

1) உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட் login செய்து கொள்ளுங்கள். பிறகு settings --> Basic சென்று Export Blog (Blog Tools அருகில் இருக்கும்) கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் Download Blog என்று ஒரு பட்டன் இருக்கும்.
அதை கிளிக் செய்து உங்கள் கணிப்பொறியில் .xml file ஆக சேமிக்கவும்.
பிறகு தேவைப்படும்போது import செய்து கொள்ளலாம்.

2) இதைவிட எளிதான வழி www.wordpress.com சென்று உங்களுக்கென ஒரு புது அக்கௌன்ட் தொடங்கவும். தொடங்கிய பிறகு, அங்குள்ள Tools --> Import கிளிக் செய்தால் உங்களுக்கு பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் ஒன்றான blogger கிளிக் செய்யவும். (உங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட் லாகின் செய்துக்கொண்டு கிளிக் செய்தால் எளிது) நீங்கள் வைத்திருக்கும் அனைத்து பதிவுகளும் லிஸ்ட் செய்யப்படும். அந்த லிஸ்ட்டில் தேவையானவற்றை மட்டும் இம்போர்ட் பட்டன் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.


எனது இரண்டு வலைத்தளங்களையும் http://thodar.wordpress.com என்ற wordpress தளத்தில் சேமித்து உள்ளேன். இம்போர்ட் செய்யும்போது உங்களது widget மற்றும் திரட்டிகளுக்காக நீங்கள் இணைத்த add on scripts எதுவும் இம்போர்ட் செய்யப்படாது. ஆதலால், இந்த தளமும் malware மூலம் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

இவ்வாறு வாரம் ஒருமுறை இம்போர்ட் செய்து கொள்ளலாம். ஒவ்வொருமுறை இம்போர்ட் செய்யும்போதும் புதிதாக எழுதப்பட்டுள்ள இடுகைகளும் / பின்னூட்டங்களும் மட்டுமே ஏற்றப்படும். ஆதலால் நேரம் அதிகம் ஆகாது.

Friday, November 27, 2009

பிடிக்காதவர்கள் / மிகவும் பிடிக்காதவர்கள்


நண்பர் பீர் அவர்களின் அழைப்பை ஏற்று பலமுறை எழுதி ஏனோ பதிவிடாமல் இருந்து வந்திருக்கிறேன். இந்தப்பதிவை தொடங்கிய மாதவராஜ் "பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர்" என்று எழுதி இருந்தார். எனக்கு பிடிக்காதவரை எழுதவதில் ஒரு பிரச்னையும்/மனத்தடையும் இல்லை. பல categoryகளில் பிடித்தவர் உடனடியாக மனதிற்கு தோன்றினாலும் பிடிக்காதவர் பிடிபட மறுக்கிறது. Anyways, முயற்சி செய்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பதிவர்

பிடித்தவர் - தண்டோரா. பிரமாதமான எழுத்துநடை. நகைச்சுவையும் சூப்பர். (உன்னைப்போல் ஒருவன் பட விவாதத்தில் தேவையில்லாமல் வெட்டியாக கலந்துக்கொண்டபோது நான் கண்டெடுத்த பதிவர் !)

பிடிக்காதவர் - எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் :)-

கவிஞர்

பிடித்தவர் - நான் கவிதைகளை பதிவுகளில் மட்டுமே படித்துள்ளேன். அவற்றுள் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதைகள் பிடிக்கும். (most of them)

பிடிக்காதவர் - முதல் ஒன்றிரண்டு வரிகளில் கவிதை புரிய கடினமாக இருந்தால் படிப்பதில்லை. ஆதலால் பிடிக்காத கவிதைகள்/கவிஞர்கள் என்று எதுவும்/யாரும் இல்லை.

எழுத்தாளர்

பிடித்தவர் - தி ஜானகிராமன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ஆதவன் தீட்சண்யா, சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர்

பிடிக்காதவர் - விமலா ரமணி, பாலகுமாரன், ராஜேந்திரகுமார்

விளையாட்டு வீரர்/வீராங்கனை

பிடித்தவர் - ஜன்ஷேர் கான் , கேரி கஸ்பரோவ், ஸ்டீபான் எட்பர்க், வீனஸ் வில்லியம்ஸ், மரடோனா, அஷ்ராவின், அசாருதீன், லாரா, வாசிம் அக்ரம், டைகர் வுட்ஸ் (விளையாட்டுக்கு மட்டும் நாடு / மாநிலம் ரூல்ஸ் ஒதுக்கப்படுகிறது)

பிடிக்காதவர் - நண்பர் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த் பெயரை எழுதி இருந்தார். அதுக்கு காரணமாக அவர் ஸ்பெயினில் வசிப்பதை சொல்லி இருந்தார். அவரை பின்னூட்டத்தில் பிடிக்காததற்கு "இது எல்லாம் ஒரு காரணமா" என்று கேட்டு இருந்தேன். அதற்கு அவர் பிடிக்காத விளையாட்டு வீரர் எழுதுவது சுலபமில்லை. யோசித்துப் பாருங்கள் என்று கூறி இருந்தார். அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சச்சின் பேட்டிங் செய்யும்போது வாசிம் அக்ரம் பந்துபோட வந்தால் "டேய், அவன் காலை உடைங்கடா" என்று கத்தினாலும் மனதின் ஒரு மூலையிலாவது அவரது பந்துவீச்சை ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை.

நடிகர் / நடிகை

பிடித்தவர் - கமல், சிம்ரன், சிவாஜி

பிடிக்காதவர் - நமீதா !

இசை அமைப்பாளர்

பிடித்தவர் - முன்பு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். இப்போழுதென்னவோ சற்றுப் பழையப் பாடல்கள் பிடிக்கின்றன.

இதைத்தொடர புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை அழைக்கிறேன் :)-

Monday, November 23, 2009

திருடுதல்


சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.
என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?

கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?

ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?

நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.

மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?

சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?

எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?

இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?

இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?

இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?

அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?

நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?

கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?

எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் - நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?

அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?

அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?

பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.

ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.

ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.

Wednesday, November 18, 2009

கிச்சடி - 19/11/09

ஐரோப்பா பிரெசிடென்சி ரேஸ்ல டோனி ப்ளேர் காலி. ரைட் டு சென்டர் தலைவர் தான் யாராவது வருவாங்க. யாருன்னு பார்க்கலாம்.

நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுல பிரான்ஸ் ஜெயிச்சாங்க. பட், ஹென்றி கையால பந்தை தள்ளிவிட்டு அதுல gallas கோல் அடிச்சார். அதை காரணமா வச்சி ரீமேட்ச் வைக்கச்சொல்லி ireland football association கேட்டு இருக்காங்க. EU Brussels summit ல ireland பிரதமமந்திரி பிரெஞ்சு ப்ரெசிடென்ட் கிட்ட பேசப்போறாராம். Even if FIFA agrees, it can't be a good justice to ireland as french would defintiely start as favourites again. These sort of injustice in sporting contests should remain as it is.

உலகம் முழுக்க irish pub ரொம்ப பிரபலமா இருக்கு. என்ன காரணம் ?

ஆதவன் படம் யாராவது முழுசா பார்த்தீங்களா ? குருவி வில்லு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல.

நண்பர் பீர் பிடித்தவர் / பிடிக்காதவர் தொடர் எழுதச்சொல்லி கூப்பிட்டார். ரெண்டு மூணு முறை எழுதிட்டேன். ஆனா சுவாரசியமாவே இல்லை. யாரெல்லாம் என்னோட பிடித்தவங்க லிஸ்ட்ல வரணும், யாரெல்லாம் வரக்கூடாதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. வாழ்க்கையிலே நாமே எதைத்தான் முடிவு பண்ணி இருக்கோம் ? இதை மட்டும் முடிவு பண்ண ?

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வரும் ஒரு ஜட்ஜ் சுபா. அவங்க பிரமாதமா contestant கூட empathize பண்றாங்க. ரொம்ப நல்ல குவாலிட்டி.

தமிழ்ல virtual keyboard பார்த்துக்கிட்டே டைப் பண்ணுவது மாதிரி ஏதாவது மென்பொருள் இருக்கா ? Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல.

வயித்து வலி ரொம்ப அதிகமானா கத்தியால வயத்தை கிழிச்சா வலி நிக்குமா ?

ஒரு அருமையான சமூகப்புரட்சி சிறுகதையை மீள்பதிவா போட்டா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடலை. ஏன் இப்படி ?

கீழே நவம்பர் 24,2007 ல கவுஹாத்தில ஆதிவாசிகள் தங்களுக்கு ST அந்தஸ்து தரச்சொல்லி நடத்திய போராட்டதின் போது நடந்த வன்முறை வீடியோ. அடுத்தவாரம் ஊடகத்துல இந்த சம்பவம் குறித்தான நினைவூட்டல்கள் இருக்குமா ? இல்லாட்டி அன்றுடன் சச்சின் கிரிக்கெட் விளையாட வந்து 20 வருஷம் 9 நாள் ஆனது குறித்து ஏதாவது கலந்துரையாடல் இருக்குமா ?


வீடியோவில் வந்த பெண்ணின் பெயர் லக்ஷ்மி ஓராங் சுஷந்தா தாலுக்தார் . அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்றார். அவரால் ஏன் வெற்றிப்பெற முடியவில்லை ?

Friday, November 6, 2009

சிறுகதை - கல்யாணம்

டேய், உனக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியல. நீ அடிச்சி இருக்கற கூத்துக்கும், உன்னோட ரசனைக்கும் ஒரு கிராமத்து பொண்ணு கேக்குதாடா ? குடும்ப சகிதமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்த செம்பருத்தியை பெண் பார்க்க சென்று கொண்டு இருந்த ரவியை நோக்கி கேள்விகனையை வீசினான் மூர்த்தி.

கொஞ்சம் அடக்கி வாசிடா! கிராமத்துல யாராவது கேட்டுட்டு தப்பா நினைச்சிக்க போறாங்க என்று நண்பனை அடக்கியவாரே நடந்தான் தாயின் விருப்பத்திற்காக கல்யாணத்தில் நாட்டம் கொண்ட ரவி. பெண் வீட்டில் ஒரு படையே கூடி இருந்தனர். பெண்ணின் தந்தை பிள்ளை வீட்டினரை வரவேற்று உட்கார வைத்தார். வழக்கம் போல், போண்டா மற்றும் காபி கொண்டு வந்தாள் செம்பருத்தி.

பெரியவர்கள் செம்பருத்தியையும் ரவியையும் தனியே பேசுமாறு விளித்தனர். பம்பரம் போன்று சுழன்று செம்பருத்தியின் கூட பிறந்தவர்கள் அனைவரையும் கவனித்தனர். தோட்டத்தில் செம்பருத்தி ரவியிடம் அவளது காதலனை பற்றியும், குடும்பப்பகை பற்றியும் கூறி, தன்னை தயவு செய்து நிராகரிக்குமாறு கெஞ்சினாள். திரும்பி வந்த ரவி தனது பிடித்தத்தை தெரிவிக்க பெண் வீட்டினர் திடுக்கிட்டனர். பெண்ணின் பாட்டி தனது மகனிடம் சென்று "இது எல்லாம் இப்போ சகஜமா நடக்கிறது தான். உன்னோட பசங்க, பையன் முன்னாடி வந்து நிக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது. சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணிடு " என்று கூற ரவியின் திருமணம் செம்பருத்தியின் தம்பி சங்கருடன் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் இனிதே நடந்தேறியது !

( எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை )

Thursday, November 5, 2009

சச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்

ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா தோற்ற மேட்ச் எண்ணிக்கை - 11 + 1. இதை வைத்து சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற கண்ணோட்டத்தில்

http://blog.mohandoss.com/2009/05/3.html

கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

என்னிடம் நேரம் மிகுதியாக இருப்பதால், (பெயர் தேட/வைக்க எந்த நாயும் வளர்க்காததால்) இந்தியா தோற்ற அந்த 11 + 1 மேட்ச்கள் குறித்த கீழ்வரும் ஆராய்ச்சி.

0) சச்சின் - 175. அடுத்தபட்சம் அதிகமாக ரன் எடுத்தது சுரேஷ் ராயினா. அவர் எடுத்த ஓட்டங்கள் - 59. சச்சின் ஆட்டம் இழந்தபோது இந்தியா 17 பந்துகளில் 19 ரன் எடுக்கவேண்டிய நிலை. அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இந்தியாவின் இலக்கு 351. இந்தியா 49.4 ஓவர்களில் 347 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

1) சச்சின் - 146. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் ஜாகீர் கான். அவர் எடுத்த ரன் எண்ணிக்கை 32. இந்திய அணி முதலில் பேட் செய்து 283 ரன்கள். சேஸ் செய்த ஜிம்பாபவ் கடைசி பந்தில், கடைசி விக்கட் மூலம் வெற்றி பெற்றது.

2) சச்சின் - 143. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் லக்ஸ்மன். அவர் எடுத்த ரன்கள் 35. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 284 ரன்களை சேஸ் செய்த பொழுது 250 ரன்களை மட்டுமே பெற்று தோற்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த மேட்சின் முக்கிய நோக்கம் பைனலுக்கு தகுதி பெறுவதே. அந்த இலக்கை அடைந்த பிறகே சச்சின் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் தெரிந்த யாரும் மறக்கமுடியாத சதம். இதன் பிறகு நடந்த பைனலில் சச்சின் மறுபடியும் சதம் அடித்து இந்தியா வென்றது.

3) சச்சின் - 141 not out. அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பெற்றவர் இர்பான் பதான். 64. இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 309. இதன்பின் விளையாடிய மேற்கு இந்திய அணி 141 ரன்களே எடுத்தபொழுது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. DL method மூலம் WI வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

4) சச்சின் - 141. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். இந்திய அணி 329 ஓட்டங்களை சேஸ் செய்தது. 38 ஓவர்களில் இந்தியா 245 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சச்சின் நான்காவதாக ஆட்டம் இழந்தார். இந்தியா 48 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்த டிராவிட் 36 ரன்களை எடுத்தார் !

5) சச்சின் - 137. முதலில் பேட் செய்த இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 271. சச்சினுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை எடுத்த அசார் 72 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இலங்கை 49 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இது இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி. மனோஜ் பிரபாகர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து off spin பவுலிங் போட்ட பந்தயம். ஜெயசூர்யா அருமையாக விளையாடிய ஆட்டம். சச்சின் தனது பத்து ஓவர்களில் நாற்பது ரன்கள் கொடுத்தார்.

6) சச்சின் - 123. முதலில் பேட் செய்த இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 315. அடுத்ததாக டோனி 47 ரன்கள் எடுத்தது குறிப்படத்தக்கது. சேஸ் செய்த பாகிஸ்தான் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

7) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்தியா எடுத்த மொத்த எண்ணிக்கை 226. சச்சின் சற்று மெதுவாகவே விளையாடி இருக்கிறார். அவரது strike rate 80. அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் குவித்த அசார் ஸ்டிரைக் ரேட் 59. அவர் எடுத்த ரன்கள் 58. இலங்கை 45 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றி பெற்றது.

8) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்திய அணி எடுத்த எண்ணிக்கை 224. இலங்கை 44 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்களை எடுத்தது RR singh. அவர் எடுத்த எண்ணிக்கை வெறும் 35 ரன்கள்.

9) சச்சின் - 101. சவுரவ் - 127. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 279. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2001ல் நடைபெற்றது. இந்த ரன்கள் போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் SA 49 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

10) சச்சின் - 100. இர்பான் பதான் - 65. டோனி - 68. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 328. சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்கு தெரியாத நிலையில் அடிக்கப்பட்ட சதம்.

11) சச்சின் - 100. இந்திய அணி - 226. அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த பெருமை manjrekar. 41 ரன்கள். சேஸ் செய்த பாகிஸ்தான் 190 ரன்களை எடுத்து DL method மூலம் வெற்றி பெற்றது.

சச்சின் சதம் அடித்து தோற்ற 11 + 1 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில்.

மிஞ்சி இருக்கும் இரண்டு + ஒன்று போட்டிகள் குறித்து 2) 0) மற்றும் 4) பார்க்கவும்.

Wednesday, November 4, 2009

கிச்சடி - 04/11/09

உளறல்கள் பேத்தல் பிதற்றல்கள் blabberings - பதிவுகளின் தலைப்புக்களில் காணக்கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள். ஏன் படிக்கறவங்களுக்கு இது கூடவா தானா புரியாது ?

சில நாட்களாக ட்விட்டரில் எனது பிதற்றல்களை எழுதி வருகிறேன். ஒருவிதத்தில் ப்ளாக் அடிக்ஷனில் இருந்து வெளிவர உதவுகிறது. ட்விட்டர் அலுவுலகத்தில் block செய்யப்பட்டுள்ளதால் புதிதாக போதை ஏற வாய்ப்பு இல்லை.

வலையில் சும்மா மேய்ந்தபொழுது "மூணார்" என்ற ஒரு படம் பார்த்தேன். (முதல் பத்து நிமிடங்கள் மட்டும்). படத்திற்கு இசை வேதம்புதிது "தேவேந்திரன்". இவ்வளவு வருடங்கள் எங்கு சென்றிருந்தார் ?

புதிதாக எனது பதிவில் Live Traffic Feed பார்க்க ஒரு விட்ஜெட் வைத்துள்ளேன். தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காட்ட மறுக்கிறது. ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா ?

ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன. சரியென்று வீட்டில் கிடந்த வேறொரு புத்தகத்தை படித்ததில் கிடைத்த ஒரு பொன்மொழி.

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர் தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

( உங்கள் இல்லத்துக்கு தேவையான 1008 வீட்டுக்குப் குறிப்புகள் - திருமதி M. சாந்தி அன்னம் பி. ஏ. லிட். இது குறிப்பு எண் 648.)

பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு தொடர்பதிவிலும் எனக்கு அழைப்பு இல்லாததால் donald barthelme எழுதிய பலூன் என்ற ஒரு சிறுகதையை மொழிப்பெயர்க்க முயன்று வருகிறேன். இதுவரை திருப்தி இல்லை. பார்க்கலாம்.

முதல்முறையாக இம்மாதத்தில் ஒரு இலக்கிய இதழ் படித்தேன். அகநாழிகை வாசுதேவனுக்கு நன்றி. முதலில் இருந்த பாவண்ணன் சிறுகதை எளிதான மொழியில் இருந்ததால் "இலக்கிய இதழ்" தானா என்ற சந்தேகம் வரவே செய்தது. பூனைக்குட்டி ஆக்கிரமித்து இருந்ததால் சந்தேகம் நிவர்த்தியானது. கவிதைகளை படிக்கவில்லை.

வாழ்க்கையில் முதல்முறையாக தனியாக இருக்கும்பொழுது தனிமையை உணருகிறேன். மாற்றம் அவசியமாகிறது.

கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊருக்கு போக மாட்டேன்

இதை வெண்பாவாக மாற்றுவது சாத்தியமா ?

ஈசியா கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ தெரியல, இப்ப இதுவும் எழுத வரமாட்டேங்குது. எழுதற மொழியும் திருப்பிப் படிச்சா எரிச்சலா இருக்கு.

நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?

writerpaiyon என்பவரின் ட்விட் கலக்கலாக இருக்கிறது. சாட்டில் ஒரு நண்பர் அதுவேறு யாருமல்ல "நானே" என்று கூறினார். அந்த நண்பரின் பெயரை சொல்வது நாகரீகமாக இருக்குமா ?

ஒருமுறை மக்கள் டிவி பார்த்தபொழுது "நாகரீகம்" என்பதற்கு சரியான தமிழ் சொல் "சால்பு" என்று கூறினர். சரியா ?

Monday, October 26, 2009

கடைசியில் ஒரு திருப்பம் (சர்வேசன் 500 நச்ன்னு ஒரு கதை 2009 போட்டிக்காக)


ஒரு பத்திரிகைக்கு நாளை மறுநாள் கதை அனுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளேன். ஏனோ எழுதிவைத்த கதைகளை அனுப்ப மனம் இடம்கொடுக்கவில்லை.

- இந்த பத்திரிகை வாசகர்களுக்கு தகுந்த மாதிரியான சிறுகதைகள் அவற்றுள் இல்லை.

- என்னிடம் இருக்கும் கதைகளை இந்த பத்திரிகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை. அதைத்தவிர, இது போட்டிக்கான சிறுகதை. இப்போட்டியின் விதிமுறைப்படி கடைசியில் ஒரு திருப்பம் இருக்கவேண்டும்.

- பலராலும் அறியப்பட்ட நான் போட்டியில் கலந்து கொள்வது குறித்து எனது முதன்மை வாசகியான பத்மா வருத்தம் தெரிவித்தாள்.இதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

- போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டது தான்.

- முடிவும் நான் அறிந்ததே.

- எழுத்தையே தொழிலாக கொண்ட எனக்கு இதுவரை கதைக்கருவுக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. ஆனால் இன்று ஏனோ வறட்சி. கடந்த ஆறு வருடங்களாக எழுதாதது கூட காரணமாக இருக்கலாம்.

- கதை எழுத எப்பொழுது முயன்றாலும் ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்வது எனக்கு வழக்கம்.

இன்றும் நடக்கத் தொடங்கினேன். பழைய கதைகளுக்கு வந்த விமர்சனத்தை அசை போட்ட படியே நடந்தேன். நான் எழுதிய கதைகள் பலதும் வேறு யாரிடமிருந்தாவது எடுத்தாளப்பட்டதே ! ஆதலால் விமர்சனங்கள் என்னை பாதித்ததே இல்லை. அத்திபூத்தாற் நானே சொந்தமாக எழுதும் கதைகளை பிரசுரத்துக்கு அனுப்புவதே இல்லை. எந்த பத்திரிகையும் பதிப்பகமும் அதற்குரிய தகுதியை அடையவில்லை என்பதே எனது வாசகிகளின் கருத்து. நடந்ததில் பத்மாவின் வீட்டருகே வந்துவிட்டேன். ஜன்னல் வழியாக மிதுன் என்னைப் பார்த்து முறைத்தான். சிறு புன்முறுவலோடு அவனைக் கடந்தேன். பத்மாவை மணம் புரிவதற்கு முன்பு அவனுடன் நான் சிறிது காலம் நட்பாக பழகியுள்ளேன். அதன்பிறகு ஏனோ ஒரு இடைவெளி. இன்னும் சிறிது தூரத்தில் ரமேஷ். அவனையும் கடந்தால் சிறிது இடைவெளிவிட்டு முனைவீட்டில் பிரவீன். நடையின் வேகத்தை சற்றே தளர்த்தினேன். நட்பு, காதல் எதுவுமே எனக்கு நிலையானதாக இருந்ததில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் அதற்கான காரணம் என் அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.

ம்ம்ம் நினைவை கலைத்துக் கொண்டே நடந்தேன்.

- சிறுகதை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கான நிகழ்வை அழகாக கூறுவது என்று பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன்.

இன்று ஏனோ ஒரு குறுநாவலுக்கான கருவே மனதில் தோன்றுகிறது. நாளை தொலைபேசியில் கதை அனுப்ப முடியாது என்று தெரிவித்துவிட வேண்டியது தான். அதுதான் நியாயமும் கூட. இல்லையென்றால் திருப்பம் கொடுப்பதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். இல்லாத கதையில் முடிவு எழுதுவதே கடினம். அதிலும் ஒரு திருப்பம் வேறு என்றால் படிப்பவருக்கு எரிச்சலே மேலிடும். எனக்கென்ன காசா பணமா ? நான் கதையை திருப்பிப் படிக்கக் கூட வேண்டியதில்லை. படித்தாலும் சிரிப்பு தான் வரும். பத்திரிகை ஆசிரியர் மற்றும் வாசகனின் தலையெழுத்தை நினைத்து. நொந்தபடியே தெருவின் எல்லைக்கு வந்திருந்தேன்.

இனி திரும்ப வேண்டும். வலது புறத்தில் ஒரு திருப்பம் இருந்தது.

Monday, October 19, 2009

மிருதுளாவின் நாட்குறிப்புக்கள் - சிறுகதை


ரமேஷ் வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 29 வருடம் - 3 மாதம் - 17 நாட்கள் ஆகின்றன. பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட். தனிவாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருபவன். அவனுக்கு திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவனது மனைவியின் சொத்து மதிப்பு இந்த க்ஷணத்தில் மதிப்பிட்டால் 63 கோடிக்கும் மேல். அழகானவள். ரமேஷிடம் ஆத்மார்த்தமான அன்பு கொண்டவள். செஸ் விளையாட்டில் GM பட்டம் பெற தகுதி பெற்றவள். அவளது பெயர் மிருதுளா.

அவனின் வாழ்க்கைக்குறிப்பை மேலும் எப்படி தொடர்வது என்று எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

"தனது கையில் இருந்த பந்தை விட்டெறிந்து 42' இன்ச் Plasma தொலைக்காட்சியை எப்பொழுது உடைக்கிறானோ அதனுடன் நிறுத்திக்கொள்ளேன்" என்று மிருதுளா கூறியதாக ரமேஷ் என்னிடம் சொன்னான். அப்படிச் செய்தால் அவன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தியது எழுதப்படாமலே போய்விடுமே. அதனால்.

ரமேஷ் தனது 23வது வயதில் சுவீடனில் வசித்து வந்தபோது ஒரு ski ரெசார்ட்டில் மிருதுளாவை சந்தித்தான். இருவருக்கும் மலையேற்றம் ஒரு விருப்பமான விளையாட்டு என்பது புரிந்தது. 2001 - 2003 வரை சிலி மற்றும் டான்சானியாவில் உள்ள பல மலைக்குன்றுகளை ஒன்றாக hike செய்தனர். ஆனால் ஏனோ அதன்பிறகு இன்றுவரை வேறு எந்த hiking செய்யவும் இல்லை / அனுபவத்தைப் பற்றி பேசுவதுமில்லை. ஒரேயொருமுறை மிருதுளாவின் தோழி நன்றாக குடித்திருந்த சமயத்தில் அவளிடம் கிளிமஞ்சாரோவை ஏறியவுடன் வெறுமையாக உணர்ந்ததாக ரமேஷ் கூறியுள்ளான். காரணம் தெரியவில்லை. ரமேஷிற்கு.

சுலக்ஷ்னாவை கத்தியால் குத்த என்ன காரணம் இருக்கமுடியும் ? அவளைப் பற்றி ரமேஷிடம் கேட்டால் ஒரே வார்த்தையில் "வெதுவெதுப்பானவள்" என்று கூறுவான். அதன் அர்த்தம் என்னைப்போலவே பலருக்கும் புரியாததால் அவளின் குணங்களை விரிவாக ஆராய வேண்டும். பிறகொரு சமயத்தில்.

மிருதுளா/ரமேஷ் இருவரும் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வந்தனர். பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே. மனஅமைதி தேவைப்பட்டால் தோழன் தோழி மற்றும் நைட் கிளப். உடல் அசதியை போக்க Sauna மற்றும் Massage. மிருதுளாவும் ரமேஷிற்கு massage செய்வது உண்டு. அவளுக்கு Acu-Puncture கூட தெரியும் என்று ரமேஷ் பெருமைபட்டுப்கொள்வான். அந்தரங்கமான எந்த விஷயத்தையும் அவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதில்லை. ஒருசமயம் அவர்களுக்கு ஒரு ஆன்மீக குருவின் அறிமுகம் கிடைத்தது. ஆன்மாவை சொஸ்தப்படுத்த அவரின் வழிமுறைகளை நாடினார்கள். மசாஜ் செய்யப்படும்போது massaeurயின் கைகள் வலிக்குமோ என்று ரமேஷிற்கு தோன்ற ஆரம்பித்தது அவரின் அறிமுகத்துக்கு பிறகு தான். மசாஜ் மற்றும் ஆன்மிகம் - இரண்டையும் விட்டு விலகி வந்தான்.

சுலக்ஷனாவின் மூக்கு மற்றும் புருவம் மிகவும் நேர்த்தியானது.அவள் மிருதுளாவிற்கு வியன்னாவில் அறிமுகமானாள். ஆஸ்திரிய பெண்களும், சிறுவயதில் பார்த்த ஸ்ரீரங்கத்து பெண்களும் ஒரே இனமாக இருக்கவேண்டும் என்று மிருதுளா கூறுவதாக ரமேஷ் என்னிடம் பலமுறை கூறியுள்ளான். அவனுக்கு சுலக்ஷனா செய்யும் Schnitzel மிகவும் பிடிக்கும். அதற்கெனவே அவளிடம் அடிக்கடி செல்வான். மிருதுளாவிற்குப் பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்பு ரமேஷ் ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணிநேரங்கள் பணிபுரிவான். ஹைபர் ஆக்டிவ்வாக இருப்பான். அதற்கென neuro enhancement drug உபயோகித்ததாக கூறுவான். அதனால் எந்த கெடுதலும் இல்லை என்பது அவனுக்கு அப்பொழுதே தெரியும். அடராள் / ப்ரொவிஜில் பயன்படுத்தினான் என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு மில்லிகிராம் என்று என்னிடம் சொன்னதில்லை. எதேச்சையாக ஒருமுறை தொலைக்காட்சி ரிமோட்டை நோண்டியபோது மைஜென்டிவி என்ற ஒரு சேனல் அறிமுகம் ஆனதாம். அதில் வந்த யோகாவால் கவரப்பட்டு தனது காது மற்றும் மூக்கை விரல்களால் சுழட்டி பார்த்தான். முதல் பதினைந்து நிமிடத்திற்கு மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்ததாம். பிறகு தான் நான் முன்பு கூறியதுபோல் பக்கத்தில் இருந்த பந்தை விட்டெறிந்து தொலைக்காட்சியை உடைத்தான். இத்துடன் இந்தக்குறிப்பை முடித்துக் கொள்ளவேண்டியது தான். ஏனென்றால்.

இப்பொழுதும் அவன் ஏன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தினான் என்பதை எழுத முடியவில்லை. கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதைத் தவிர.

ரமேஷ், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், அதற்கான காரணங்களையும் விலாவாரியாக நாட்குறிப்பில் எழுதவேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவான். படிப்பவர்களின் அனுமானத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் கடுமையாக இருந்தான். நானும் அப்படியே எழுதியுள்ளேன்.

மிருதுளா, சுலக்ஷனாவிடம் இருந்த தனது தொடர்பை துண்டிக்கமுடியாமல் ரமேஷின் உதவியை நாடினாள் என்றே சந்தேகிக்கிறேன். வேறு எந்த அனுமானமும் நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதால் இதை எழுதுகிறேன். அதைத்தவிர அவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டம் இல்லை.

இப்படிக்கு இனியாள்.

பின்குறிப்பு - எனக்கு மிருதுளாவை அதிகம் தெரியாததால் மிருதுளாவின் நாட்குறிப்புக்களை எழுதமுடியவில்லை. தெரிந்தவர்கள் எழுதலாம்

முற்றும்).

Friday, October 16, 2009

கிச்சடி - 16 அக்டோபர்

போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே - நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.

இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.

சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
"இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com"
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.

அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். "அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ" - அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.

World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?

WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் "//" சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !

எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.

எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும் :)- எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் "புனிதப்போர்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.

Monday, October 5, 2009

விதி வலியது

1.A - available/single? Not available & not single - Not single / Available என்ற ஆப்ஷன் இல்லாததால் வெளிநடப்பு.

2 B-.Best friend - எனது அனைத்து நண்பர்களும்.

3.C- Cake or Pie- லூசுக் கேள்வி.

4.D - Drink of Choice - ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட். போன கேள்வியோட பாதிப்பு.

5.E- Essential item you Use every day - டூத் பிக்.

6.F-favorate color - ப்ளூ

7.G-gummy bears or worms - or

8.Home Town - திருச்சி

9.I-Indulgence - தூக்கம்.

10.J- january/february - ஐயா ஜாலி ! march, april, may, june, august, september, october, november, december.

11.K-Kids and their Names - பையனின் பெயர் அபயன்-abyan/ஹயக். ஒரே பையன் தான். பிறந்து ஒரு மாதம் ஆகிறது.

12.L-Life is incomplete with out- கல்யாணம்.

13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.

14.N - Number of sibilings - ஒரே ஒரு அக்கா.

15.O-Orange or Apples - ஆரஞ்சு

16.P- Phobias/fears - கேள்விகள், கேள்விகள், கேள்விகள்

17.Q-Quote for today - All generalizations are wrong including this one.

18.R-Reason to Smile - எனது குட்டிப்பையனின் அனைத்துச் செயல்களும்

19.S-Season - முன்பெல்லாம் ஸ்போர்ட்ஸ் சீசன் உண்டு. இப்பொழுது வருடம் முழுதும் களை கட்டுகிறது.


21.U-Unknown fact about me - முந்தைய ஜென்மத்தில் எனது பெயர் pglakti zsditum

22.V-Vegetable you won't Like - பரங்கிக்காய்.

23.W-worst Habit - நெருங்கியவர்களிடம் மட்டும் எளிதில் எரிச்சல் அடைவது.

24.X- Xrays you had - தவறு செய்து விட்டு கண்ணாடியை பார்த்தால் கண் கூசும் என்கிறார்களே. அதுபோன்ற தத்துவார்த்தமான பதில் சொல்லவேண்டுமா ?

25.Y-Your favorate Food - அராபியாட்டா ரசம். நான் கண்டுபிடிச்சதாக்கும்.

26.Z-Zodiac sign - மீனம்

அன்புக்குரியவர்கள் - என் சொல்பேச்சு கேட்கும் அனைவரும்.

ஆசைக்குரியவர் - கேள்வி singular ஆக இருப்பதால் வெளிநடப்பு.

இலவசமாய் கிடைப்பது - சம்பளம்..

ஈதலில் சிறந்தது - ஈஈஈஈ. புன்னகை.

உலகத்தில் பயப்படுவது - இதுக்கு நான் பதில் வேற எழுதனுமா ?

ஊமை கண்ட கனவு -

எப்போதும் உடன் இருப்பது - அஃறினை கேள்விக்கு காரணம் என்ன ?

ஏன் இந்த பதிவு - நாளைய சரித்திரம்.
ராதாகிருஷ்ணன் சினிமா தொடர் அழைப்பை ஏற்று தான் இந்த வலைப்பதிவே தொடங்கினேன். அதுவரை பின்னூட்டம் மட்டுமே எழுதி மகிழ்ச்சியாக இருந்தேன். இப்பொழுது மறுபடியும் அவரின் அழைப்பை ஏற்று. (எனது அம்பதாவது பதிவா வந்து இருக்கணும். கவிதை ஆசையில விட்டுப்போச்சு..)

ஐஸ்வர்யத்தில் சிறந்தது - ஆரஞ்ச் வண்ண பவள மாணிக்க கல்.

ஒரு ரகசியம் -

ஓசையில் பிடித்தது - ரகசியம் கேட்டதா ?

ஔவை மொழி ஒன்று -

Thursday, September 24, 2009

கிச்சடி - உபோஒ மவுனத்தின் மொழிக்கு எதிர்வினை

கார்க்கியோட வேட்டைக்காரன் பாடல் விமர்சனம் படிச்சுட்டு பாட்டு கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சி மனசு விட்டு சிரிச்சேன்.

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம், எதிர்விமர்சனம், தார்மீக கோபம், கிண்டல்கள், மவுனத்தின் மொழி, பார்ப்பனீயம், ஆபாசம்.

எல்லாரும் பின்னூட்டத்துல ஜ்யோவ்ராம் சுந்தர் கிட்ட எதுக்கு நியாயம் கேக்கறாங்கன்னு தெரியல.

சரியோ / தவறோ விமர்சனம் தைரியமா பல பேரு எழுதினாங்க. சரியோ / தவறோ பலபேர் அதற்கு எதிர்வினை செஞ்சாங்க.

விமர்சனம் எழுதினவரை விளக்கம் கேட்டா கவிதை எழுத போன்னு சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்கும் சுகுணா திவாகர் வாழ்க.

நல்லவேளையா நேர்மை என்பது ஒரு பண்பு - அவ்வளவேன்னு எந்த பதிலும் இல்லை.

நீரஜா என்னும் பார்ப்பனீய பெண்ணை கொண்டு நீதி கொடுக்கும் கமலேன்னு வாய்ஸ் கொடுப்பாரு.

மவுன மொழி மூலமா நீரஜா பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சத கூட விட்டுடலாம்.

பொண்ணு பேரு வரும் போது எல்லாம் mute பண்ணிட்டு மவுன மொழி அர்த்தம் கண்டுபிடிச்சா என்ன செய்ய !

அதை சுட்டிக்காட்டினா "தகவல் பிழையாம்". அந்த பொண்ணு பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சி கமல் கிட்ட கேட்ட நீதி எல்லாம் ?

நடிகை பேரு அனுஜா ஐயர்ன்னு எங்கயாவது படிச்சு இருப்பாரு. படத்தையே பாக்காம பப்ஸ் தின்னுட்டு விமர்சனம் எழுதி இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இடைவேளைல பப்ஸ் திங்கறவன் காமன் மேன். முழுசா பப்ஸ் தின்னுக்கிட்டே படம் பாக்காம வந்தா பல்ப் எரியற மேன் போல.

ஒரு ஏட்டு மோகன்லால் கிட்ட கமலை பத்தி விவரிப்பாரு - ‘‘அவர் தாடி வச்சிருந்தாரு, கையில வெங்கடாசலபதி பை வச்சிருந்தாரு’. உடனே மோகன்லால் சிலுவை போட்டு இருந்தாருன்னு கேப்பாரு. மவுன மொழி சொன்னது இது தான்.

வெங்கடாச்சலபதி - இந்து, சிலுவை - கிறிஸ்தவன், தாடி - முஸ்லீம்.

சுகுணா பப்ஸ் தின்னுட்டு, தக்காளி சாஸ் கிடைக்காத கடுப்புல தாடி வச்சவன் எல்லாம் இஸ்லாம் தீவிரவாதின்னு கமல் சொன்னாருன்னு மவுன மொழி விமர்சனம் எழுதுவாரு. அதை படத்தோட விமர்சனமா எடுத்துக்கணும். இதை விட படத்தை வெறும் பொழுதுபோக்கா எடுத்துக்கறது ஆபத்து போல.

கமலோட தீவிரவாதம் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஸ்ரீபெரும்புதூர் வரை நீளுதாம். கமல் விடுதலைபுலிகளுக்கு எதிரியாம்.
கமல் துர்நிகழ்வுன்னு சொல்லி இருக்கலாம்.

குண்டுவெடிப்பு சொல்லி தான பதினெட்டு வருஷம் இந்திய அரசியவாதிங்க ஜல்லி அடிக்க முடிஞ்சது. அதை கமல் தீவிரவாதம்ன்னு சொல்லி இருப்பாரோ என்னவோ. மவுன மொழிக்கு அர்த்தம் தான. எதை வேணும்னாலும் எழுதலாமே. அது தான் கருத்து ஆயிடுமே.

சரி. இவ்வளவு மவுன மொழிக்கு அர்த்தம் கண்டுபிடிச்ச விமர்சகர் படத்துல நேரிடையா வந்த பெண்ணோட கையை பின்னால கட்டுறது, கிருஷ்ணா, லால் கிருஷ்ணான்னு கூப்பாடு போடுறது, மோதி பாருன்னு சொல்றது - இதைப் பத்தி எல்லாம் பேசாம மவுனமா இருப்பாராம். நிறுவ வரும் கருத்துக்கு எதிரா இருந்தா சும்மா இருக்கறது தான நேர்மை. இல்லாட்டி அதை rationalize பண்ண ஒரு ரெண்டு பத்தி எழுத வேண்டி வரும்.

செல்வேந்திரன் பதிவை நான் ஆடிக்கு ஒருதடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் படிக்கற வழக்கம். ஆனா புன்னரசியல் பதிவை படிச்சேன். ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கற சாக்கடைல தான நாமும் கலக்கறோம்ன்னு நினைச்சாரோ என்னவோ.

99 - 1 எல்லாம் அபார கண்டுபிடிப்பு. மிச்சம் எல்லாரும் சினிமால வரும் மவுன மொழியை புரிஞ்சிகிட்டா இவரு சமூகத்தோட மவுன மொழியை கூட புரிஞ்சிப்பார் போல.

போலி டோண்டு பிரச்சனை நடக்கும்போது நான் தமிழ் வலைப்பதிவுகள் படிச்சது கிடையாது. ஆனா இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா புரியுது. உன்னை போல் ஒருவன் சம்பந்தமா 60 பதிவு வந்தா எல்லாத்தையும் படிக்கணும் போல. இல்லாட்டி நரசிம், கார்க்கி மாதிரி ஆகிடும். நீங்க தான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே ஜ்யோவ். எல்லா எடத்துக்கும் ஒரே பார்முலா கிடையாதுன்னு. அப்புறம் எதுக்கு கேள்வி ? அவங்க புரிஞ்சிகிட்டாங்களோ என்னவோ.

சரி, இந்த படத்துல நாலு இந்து தீவிரவாதி போட்டு வேன்ல காஷ்மீரீ பண்டிட்ட்னு சொல்லியோ, கோத்ரா ரயில் எரிப்பு சொல்லியோ, கோயம்புத்தூர் பாம்ப் ப்ளாஸ்ட் சொல்லியோ இந்து தீவிரவாதி விளக்கம் கொடுத்தா விமர்சனம் எப்படி இருக்கும் ?

தீவிரவாதியா நாலு chimpanzee காட்டி இருக்கலாம். PETA, Blue Cross வராம இருந்தா.

பேரு இல்லாத தீவிரவாதி தான் பெஸ்ட் சாய்ஸ்.

தீவிரவாதிக்கு பதிலா நாலு திருடனை போட்டு இருக்கலாம். திருட்டுக்கு ஏழ்மை தான் காரணம். அன்பே சிவம்ல கம்யூனிசம் பேசின கமல் தன்னை போலி கம்யூனிஸ்ட்ன்னு நிரூபிச்சிட்டாருன்னு மவுன மொழி பேசுவாங்க. ஆனா விமர்சகரை ஏதாவது சொன்னா நண்பர் சி மணி பச்சையம் கவிதையை ஒட்டி மொழில விளையாடுவார். நமக்கு வருமா ?

சம்பந்தப்பட்ட பதிவுகள்

www.athishaonline.com
jyovramsundar.blogspot.com
suguna2896.blogspot.com
selventhiran.blogspot.com
www.narsim.in

ஆசிப் அண்ணாச்சி ப்ளாக் லிங்க் தெரியலை. கமெண்ட்ல சொல்லுங்களேன். அவர் வெறும் இலக்கியம் மட்டும் எழுதுபவர்ன்னு வராம இருந்தேன் !!!

கமலின் மிக சாதாரணப் படங்களில் இதுவும் ஒன்று.

சற்று அழுத்தமாக / மக்களுக்கு எடுத்து செல்லும் விதத்தில் இந்த படத்தில் உள்ள பொதுமைப்படுத்தும் கூறுகளை சென்ஷி விமர்சனமாக எழுதி இருக்கிறார். படிக்க http://senshe-kathalan.blogspot.com/

லக்கிலுக் விமர்சனம் கூட நடுநிலையா இருந்தது. ஆனா படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இஸ்லாமியர் மீது வெறுப்பு மண்டிவிடும்ன்னு சொல்றது கொஞ்சம் ஓவர். எனக்கு வரலை. நானும் தேர்தல்ல சினிமாகாரங்களுக்கு வாக்கு போடுபவன் தான்.

Wednesday, September 23, 2009

தேடல்

தேடுபொருள் ஆனது கவிதை
பிரக்ஞை கூறு போன்ற குறிச்சொற்களால்
அடுத்த அறையில் தனது தாயின்
குரலைக் கேட்ட குழந்தை
"அம்மா, உன்னைய காதுல பாத்தேன்"
என்று கூறும்வரை.



Monday, September 21, 2009

என் 50 வது பதிவு - உயில்

செல் / அரிக்கப்பட்ட உடம்பு / இன்றே உயில் எழுத வேண்டும் / உயிருள்ள போதே / அழிக்க வேண்டும் / மாற்ற வேண்டும் / காலம்/ பாடம்
/ தாய் தந்தை - கணவன் - காதலன் / ஒலை / காகிதம் / இன்றே உயில் எழுத வேண்டும்
/ கணவன் காதல் காதல் / கணவன் / காதலன்/ நினைவுகளை / மிச்சத்தை / எஞ்சியிருக்கும் / இன்றே உயில் எழுத வேண்டும்
/ Conditions Apply /


Thursday, September 17, 2009

ஸ்போர்ட்ஸ்

சேஃப்டி காரை கொண்டு வந்தால் அலான்சோவை வெற்றி பெற வைக்கமுடியும் என்று ரெனால்ட் டீம் நம்பியதால் மற்றொரு டிரைவரான பிக்கட் ஜூனியர் தனது காரை தொண்ணூறு மைல் வேகத்தில் தடுப்பில் மோதிய படங்கள்.


Rugby ஆட்டத்தில் ஒரு வீரர் ரத்தம் வரும் பொழுது substitute செய்யப்பட்டால் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுபடியும் வந்து விளையாட முடியும். நீங்கள் படத்தில் காண்பது வில்லியம்ஸ் என்ற பிளேயர் கோடம்பாக்கத்தில் கிடைக்கும் Blood Capsule கடித்து ரத்தம் கக்கும் காட்சி.


"Are you questioning my integrity & honesty ?" கேட்ச் பிடித்ததாக அப்பீல் செய்த ரிக்கி பாண்டிங் ரிப்போட்டரிடம் கேட்ட எதிர்கேள்வி



டிஸ்கி :- முதல் இரண்டு படங்களுடன் மூன்றாவதையும் இணைத்த எனது நாணயத்தை கேள்வி கேட்டால் "Are you questioning my integrity & honesty" என்ற எதிர்க்கேள்வி கேட்கப்படாது.

Wednesday, September 16, 2009

சஷி தரூரின் ட்விட்

"Tell us minister, next time you travel to Kerala, will it be cattle class?"
Absolutely, in cattle class out of solidarity with all our holy cows."

சஷி தரூரின் நகைச்சுவை உணர்வு அபாரம்.
மனதில் பட்டதை உடனே தெரிவித்துவிட ஏதுவாக ட்விட்டர். யோசிக்க நேரம் கிடைத்து இருந்தால் இவர் இப்படி எழுதி இருப்பாரா என்பது சந்தேகமே ! வாழ்க ட்விட்டர் ! வளர்க addiction.

காங்கிரஸின் austerity டிரைவ் மீது இவருக்கு இருக்கும் விமர்சனத்தை மேலிடத்தில் முன்பே தெரிவித்து இருக்கலாம். மேலிடமும் இவர்களிடம் பேசிவிட்டு திட்டத்தை மக்களிடம் அறிவித்து இருக்கலாம்.

political fallout ஐ தடுக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கலாம். அதற்கு பதிலாக இவரின் கருத்துக்கான காரணத்தை புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். சிக்கனத்தை கடைபிடி என்று ஆணையிடுவதற்கு பதிலாக நடவடிக்கைக்கான காரணம்/தேவை/ நன்மை/ மக்களுக்கு கூற விரும்பும் மெசேஜ் போன்றவற்றை விளக்கலாம். கட்டாயத்தை சஷி தரூர் ட்விட்டி விட்டார். சென்சிடிவிட்டி புரிந்து கருத்து சொல்லி இருக்கவேண்டும் என்று உளருவதை விட்டு அனைவருக்கும் புரியும் விதமாக திட்டத்தை விளக்குவதே காங்கிரஸின் கடமை.

சரோஜினி நாயுடு காந்தியின் மூன்றாம் வகுப்பு பயணத்தை கிண்டல் செய்ததை நினைவு கூர்ந்தால் கருத்து வேற்றுமைக்கான காரணம் எளிதாக புரியும். சிலருக்கு Austerity க்கான தேவையை புரிந்து கொள்வது கடினம். அவர்களுக்கு காந்தியின் மூன்றாம் வகுப்பு பயணம் மற்றும் அவரின் costume விளம்பரமாக தான் தெரியும் அல்லது தேவையற்றதாக தெரியும். தியாகங்கள் கேள்விக்குறியாக்கப்படும். அவர்களுக்கு புரியவைப்பது தான் தீர்வு. எதிர்நடவடிக்கை அல்ல.

Tuesday, September 15, 2009

கிச்சடி - 15/09/09

அடுத்த மதர் சுப்பீரியர் kim clijsters போல.

மகளிர் டென்னிஸ் மிகவும் சுவாரசியமானது. கடந்த நான்கைந்து வருடங்களாக பலரும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர். இதை ஒரு பலவீனமாக சித்தரிக்கின்றனர். சரியா ?

சச்சின் பைனலில் செஞ்சுரி அடித்ததால் compaq கப்புக்கு மற்றுமொரு ஒரு பைனல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

WWF ரூல்ஸ் புத்தகமாகவோ லிங்காகவோ கிடைக்குமா ?

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலம் பெற்று வரும் வேளையில் வரலாற்றை மாற்றி எழுதும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது உலகப்போருக்கு முதல் காரணமாக சோவியத்தை சித்தரிக்க தொடங்கியுள்ளனர். யூதர்களுக்கு எதிராக எஸ்டோனியா மற்றும் லித்துவானியா போன்ற நாடுகள் செய்த வதைகளை தள்ளுபடி செய்தும் வருகின்றனர்.

ஆதி என்பது தமிழ் சொல் இல்லையாம். ஆதலால் அதை முதலி என்று மாற்றி அகரமுதலி என்று டிக்ஷனரியை எழுத வேண்டுமாம். திருவள்ளுவரை வடமொழி புலவராக மாற்ற ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சியாக இருக்குமோ ?

சச் கா சாம்னா (உண்மைக்கு வெகு அருகில்) என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. 21 கேள்விகளுக்கு உண்மை மற்றும் கூறுபவர்களுக்கு ஒரு கோடி. செம டீல் ! ஒரு சில குளறுபடிகள் இருக்கின்றன. 50 கேள்விகள் கேட்கின்றனர். அவற்றுக்கான பதிலை POLYGRAPH மூலம் சோதிக்கின்றனர். அதே கேள்விகளை நிகழ்ச்சியின் போது மறுபடியும் கேட்கின்றனர். முன்பு எடுத்த POLYGRAPH மூலம் பதிலை உண்மையா / பொய்யா என்று முடிவு எடுக்கின்றனர்.
போட்டியாளர் ஒரு குடிகாரர். கல்யாணத்திற்கு பிறகும் மற்ற பெண்களுடன் தொடர்பு உள்ளவர். அவருக்கு ILLEGITIMATE CHILD இருப்பதும் இப்போட்டியின் முதல் கேள்விகளின் மூலம் அவரின் தந்தைக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு ஒரு கேள்வி : உங்கள் எண்ணப்படி உங்கள் தந்தைக்கு உங்களின் மேல் பெருமை உண்டா ? போட்டியாளரின் பதில் : இல்லை. அதை தவறு என்று POLYGRAPH ரிசல்ட்(முதல் கேள்விகளின் பதில்கள் அவர் தந்தைக்கு தெரியும்முன் எடுக்கப்பட்ட) கூறியதால் அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். உண்மை, பொய் என்ற புள்ளிகள் time என்ற coordinate க்கு கட்டுப்பட்டது.

சமீபத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள அருமையான பூங்கா ஒன்றில் ஆறு வயது தாண்டிய சிறுவர் சிறுமியர் சிலம்பம் பயிற்சி செய்வதை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது.

யு எஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் மகளிர் பட்டதை வீனஸ் மற்றும் செரினா வென்றார்கள். அவர்களின் post match interview :-

TIM CURRY: Thanks for joining us for our press conference with our 2009 US Open women's doubles champions. We ask that any questions in today's press conference refer to events of today only.

With that, we'll open the floor.

Q. Congratulations Venus and Serena on your doubles championship. As it relates to events of today, you issued a statement as it relates to your actions the other night. Why did it take 48 hours for you to release the statement?

Saturday, September 12, 2009

குட்டிப்பையன்


என்னோட செல்லப்பையனை பத்தி எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே எவ்வளவு நாள் தான் இருக்கறது. ஒரு மாசமா பதிவு எழுதாம இருந்தாச்சு. கமெண்ட் எழுதறதையும் ஓரளவுக்கு குறைச்சாச்சு. இது எல்லாத்துக்கும் காரணமானவனை பத்தி எழுதாம இருக்க முடியுமா ! பொறக்கும் போதே மக்களுக்கு இவ்வளவு நல்ல சேவை செஞ்சி இருக்கறவனை பத்தி எழுதாம இருந்தா பதிவுலகம் என்னையை மன்னிக்காது.

கர்ப்பமா இருக்கும்போது அவங்கம்மா கண்ட கண்ட ப்ளாக்ல யோகா சம்பந்தமா படிச்சி இருப்பாங்க போல இல்லாட்டி முந்தைய ஜென்மத்துல ராம்தேவ் கிட்ட யோகா கத்துக்கிட்டு இருக்கான். பொறந்தவுடனயே மூச்சை இழுத்து புடிச்சிகிட்டு விடாம அழிச்சாட்டியம் பண்ணிட்டான். அப்புறம் டாக்டர் கிட்ட அடி வாங்கி மூச்சு விட ஆரம்பிச்சி, அஞ்சி நாள் ஐசீயூல இருந்து எல்லாருக்கும் திகில் கொடுத்துட்டான் ! இப்ப வீட்டுல ராத்திரி எல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு சமத்தா இருக்கான். ஆனா இப்பவும் அப்பாவை வெப்காம்ல பார்க்காம ஏதாவது பிகர் வருதான்னு லேப்டாப்ப பார்த்துக்கிட்டு இருக்கான்! ஒருவேள கிருஷ்ண ஜெயந்தில பொறந்தது காரணமோ என்னவோ !

இவரு எல்லாரையும் பயம்புடுத்தினதுல, எல்லா சாமி பேரும் இவரோட நாமகரனத்துல சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிட்டாரு. திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நீளத்துக்கு. பையன் பொறந்தா பேரு மனைவி சாய்ஸ், பொண்ணு பொறந்தா என்னோட சாய்ஸ்ன்னு ஒரு அக்ரீமென்ட் இருந்தது. சோ, அவளோட சாய்ஸ் தான். பேரு அபயன். பொண்ணு பொறந்திருந்தா இந்த அக்ரீமென்ட்டோட மதிப்பு எப்படி இருந்து இருக்கும்ன்னு எனக்கு திடீர்னு ஞாபகம் வந்ததுனால, நானும் இந்த பேரு சாய்ஸ்ல உள்ள பூந்தேன். என்னோட சாய்ஸ் ஹயக். ஒரு நாலைஞ்சு வயசுல அவனே இந்த ரெண்டுல ஒன்னு செலக்ட் பண்ணிக்கலாம் (எவ்வளவு சுதந்திரம் பாருங்க !)

ஒருவாரம் கழிச்சி முதல் vaccination கொடுக்க போனோம். ஊசி போட்டா ஒரு சின்ன செல்ல சிணுங்கல் தான். (அவங்கம்மா ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிட்டாங்க.) முதல் வாரத்துலயே ஊசிக்கு பழக்கப்பட்டுட்டான் போலன்னு வருத்தம் இருந்தது. பட், குளிக்க வச்ச போது நல்லா சத்தம் போட்டு அழறான். (அப்பா மாதிரி போல ! )

Tuesday, July 21, 2009

சுவாரசிய பதிவர்கள்

சீரியஸா எழுதுன்னு சொல்லிட்டு, வசந்தகுமார், ஸ்ரீதர் நாராயணன், ஹரன் பிரசன்னா, ராஜாராம், ரௌத்ரன் கூட எனக்கும் விருது கொடுத்து காமெடி பண்ணிட்டீங்களே அனுஜன்யா ! உங்க சார்பா, அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். நான் சென்ஷி பதிவுல அம்மா தாயேன்னு போட்ட பின்னூட்டம் படிச்சுட்டு இன்ப்ளுயன்ஸ் ஆகிட்டீங்க போல. Anyways, thanks a lot anujanya.

செந்தமிழ்ரவிக்கும் பாராட்டுக்கள். ஒரே சண்டையா இருந்தபோது நிச்சயமா தேவைப்பட்ட டைவர்ஷன்.

சரி, பேக் டு தி டாப்பிக். இப்ப நான் ஒரு ஆறு பேரை செலக்ட் பண்ணனும். நான் ரொம்ப விரும்பி படிக்கறது ஜ்யோவ்ராம், ஹரன்ப்ரசன்னா மற்றும் பத்ரியோட பதிவுகள். பட், இவங்களுக்கு எல்லாம் விருது கொடுக்க முடியாது. ரீசனும் சொல்ல முடியாது :)-

சோ, என்னோட தேர்வுகள்

அவீங்க ராஜா - பதிவு எழுத வந்து அஞ்சே மாசம் தான் ஆகுது. அதுக்குள்ளார செம ரீச். எழுத்து நடை சூப்பர். அமெரிக்காவுல உள்ள நல்லவங்களை பத்தி நெகிழ்ச்சியா பல பதிவுகள். முதல் பதிவான ஏர்டெல் சூப்பர் சிங்கர் டாப். பிரபலம் ஆவது எப்படி, எனக்கு தெரிந்த பதிவுலகம், சாரு நிவேதிதா, லக்கிலுக்ன்னு எல்லாம் எழுத வேண்டிய அவசியமே இல்லை ராஜா உங்களுக்கு. உங்களோட எழுத்துநடை, presentation ஸ்டைல் எல்லாம் அபாரம். கலக்குங்க.

பிரபாகர் - லக்கிலுக்குக்கு போடும் பின்னூட்டத்தை படிச்சுட்டு இவரோட பதிவை போய் பார்த்தேன். எளிமையான நடை. எழுத வந்து மூணு மாசம் தான் ஆகுது. எல்லாத்த பத்தியும் எழுதறாரு. Continue the good work prabakhar.

வித்யா - கொட்டிக்கலாம் வாங்க தான் இவங்களோட ஸ்பெஷாலிட்டி. ஒரு மெலிதான நகைச்சுவை உணர்வு எல்லா பதிவுலயும் இருக்கும். நான் விரும்பி படிக்கும் பதிவுகள். அடிக்கடி எழுதுங்க வித்யா.

ப்ருனோ - இட்லிவடைக்கு பிறகு நான் படிக்க ஆரம்பித்த இரண்டாவது தமிழ் வலைப்பூ. துறை சார்ந்த பதிவுகள் அபாரம். இடஒதுக்கீடு குறித்த பதிவுகள், அரசு துறையை சார்ந்த மருத்துவர், ஊழியர் தொடர்பான பதிவுகளும் எனக்கு பிடித்தமே. இளையராஜா, சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசும் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் பரமாத்மா.

பீர் - இவரோட"நானும் சிறை சென்றேன்" பதிவு படிச்சதுலேந்து கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் விடாம படிக்கறேன். ஈசி டூ ரீட் அண்ட் வெரி இன்டரஸ்டிங்.

Mr No - இதுவரைக்கும் பதிவு எதுவும் எழுதலைன்னு சொல்றாரு. இவரோட கமெண்ட் எல்லாம் எங்கேயாவது ஒரே இடத்துல செதுக்கி வைக்கனும். தருமியை பத்தி எழுதின போது மட்டும் வருத்தமா இருந்தது. மிச்சம் எல்லாம் டாப். ஆங்கிலத்துலயே எழுதுங்க நோ.

இதைத் தவிர எனக்கு இன்னபல பதிவர்களும் பிடிக்கும்ன்னு சொல்லி தெரியவேண்டியது இல்லை. சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் பிடிக்கும்ன்னு சொன்னா, புல் பிடிக்காதா, ஆன் டிரைவ் பிடிக்காதான்னு ரொம்பவே போர் அடிச்சா மட்டும் தான் கேள்வி கேட்கலாம். கேட்டா பதில் நிச்சயமா சொல்லுவேன்.

அடிக்கடி எவ்வளவு ஹிட்ஸ்ன்னு பார்க்க ஆரம்பிச்துனால கொஞ்சநாள் பிரேக் எடுத்துக்கலாம்ன்னு இருக்கேன். சோ, hopefully let us meet after a short break.

Tuesday, July 14, 2009

கிச்சடி - 14/07/2009

ஆம்ஸ்டர்டாம்மில் உள்ள சிகப்பு விளக்கு தெருக்கள் சுவாரசியமானவை. மிகப் பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன். இவற்றை கண்டுகளிக்க பல Guided tours இருக்கின்றன. இவை ஆரம்பிக்கும் இடம் சர்ச்சுக்கு நேரெதிரில் உள்ள PIC (Prostitution Information Centre). அங்கு விபச்சாரியாக இருந்த / இருக்கும் ஒரு பெண் நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

விலைமாதுகளுக்கு அரசின் மூலம் அனைத்து மருத்துவ வசதிவாய்ப்புக்களும் உள்ளன. இருந்தபோதிலும் எந்த பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது.

இங்கு நடைபெறுவது விண்டோ ப்ராஸ்டிடியூஷன் என்ற வகையறையை சேர்ந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிகப்பு விளக்கு உண்டு. விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் வீடுகளை தொந்தரவு செய்வது தவறு. மற்ற வீடுகளில் கண்ணாடி கதவிற்கு அருகே நின்று உங்களை அழைப்பார்கள். யாரையும் அழைக்கவும் / நிராகரிக்கவும் செய்வது அவர்களின் உரிமையே.

சில தெருக்கள் மிகவும் குறுகலானது. மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே நடக்கும் அளவிற்கு நெருக்கமானது. சில தெருக்கள் அகலமாகவும் இருக்கும். குறுகலாக இருக்கும் தெருக்களில் வீடுகளின் வாடகை அதிகம். அகலத் தெருக்களில் சிறிது குறைவு. (ஏனென்று கடைசியில்)

தொழில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை. ஏனென்று யூகிப்பது எளிதே.

இத்தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் விபச்சாரம் நடைபெறுவது இல்லை. சராசரி மக்களும் வசித்து வருகின்றனர். சராசரி மக்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் போது குழந்தைகளை விட்டுச்செல்ல குழந்தை காப்பகங்கள் தேவைப்படும். குழந்தைகள் படிக்க மற்றும் விளையாட கிண்டர் கார்டன்கள் தேவைப்படும். அவைகளும் இத்தெருக்களில் அடக்கம்.

தொழில்முறையாக, பெண் விபச்சாரிகள் மட்டுமே உள்ளனர். ஆண்கள் இதுவரை இல்லை.

Trafficking மூலமாக அனுப்பப்பட்ட மொரோக்கோ நாட்டு பெண்கள் விபச்சாரிகளாக கட்டாயமாக மாற்றப்பட்டு தொழில் புரிகின்றனர். அதைத் தவிர பப்பி நாய்க்குட்டி வாங்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரம் செய்ய வந்த பெண்களும் உள்ளனர்.

இங்கு காபி பார்களும் மிகவும் பிரபலம். இவற்றில் ஹாசிஷ் போன்ற ஸாப்ட் போதைப்பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன. இதற்காகவே பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆம்ஸ்டர்டாமை மொய்க்கின்றனர். பாபா காபி பார் ஒரு பிரபலமான மீட்டிங் பாயிண்ட்.

(தனது மனைவியையோ, பெண் தோழியையோ ஏமாற்றி வரும் ஆண்கள் குறுகலான தெருக்களையே தேர்ந்தெடுப்பதால், அங்குள்ள வீடுகளின் வாடகை அதிகம்)
*********************************************

இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது. முரளிதரன், வாஸ், மலிங்கா இல்லாத புதுவித இலங்கை பவுலிங் அட்டாக். விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டை
இலங்கை கடைசியில் எளிதாக கைப்பற்றியது. You strategize for every session and if you win enough number of sessions, you win the test.(Latest Coaching Philosophy) கடைசி செஷனை தவிர பாகிஸ்தான் அனைத்தையும் டாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்க்சில் தொன்னூறே ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதைப் போன்ற பல டெஸ்ட் மேட்ச்களில் இலங்கை தோற்றுள்ளது. ஒருமுறை ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் முதல் இன்னிங்க்ஸ் லீடுடன் தோற்றார்கள் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
*********************************************

திடீரென்று உங்களிடம் யாராவது கத்தி பேசினால் ஒரு படபடப்பு ஏற்படுமே, அதே போன்ற ஓர் உணர்வு எனக்கு கவிதைகளின் முதல் வரியை படிக்கும் போதே ஏற்படுகிறது. (கவிதையுணர்வு!) மூன்று வரிகளுக்கு மேல் படிக்கமுடிவதில்லை. படித்தால் புரியாது என்ற எண்ணமே மேலோங்குகிறது. உண்மையும் கூட. சிறுபத்திரிகைகள் மூலம் பிரபலமான கவிஞர் அனுஜன்யாவின் அறிவுரைப்படி கவிதை எழுதி பழக முயற்சி செய்தேன். பல மாதங்கள் கடந்தும் ஓரெழுத்து கவிதை "அ", இரண்டெழுத்து கவிதை "அ ஆ" போன்றவைகளே மனதில் வருகிறது. சரி, இது சரிப்பட்டு வராது என்று வேறொரு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். குட்டீஸ் விரும்பும் பாப்பா பாடல்களை படிக்க ஆரம்பித்துள்ளேன். அனைத்தும் அருமை. ஒருசில வருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து கவிதைகள் புரிந்தாலும்
புரியலாம். பிடித்தாலும் பிடிக்கலாம்.

Sunday, July 12, 2009

யாருக்கு யாரோ - உலகப்பட விமர்சனம்

(இதுவே எனது முதல் திரைப்பட விமர்சனம். ஒரு சில spoilers உள்ளது. எனவே கவனம். எனது எதிர்கால விமர்சனப் பார்வை பாதிக்கப்படும் அளவிற்கு திட்டி வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தபடலாம்)

படத்தின் நாயகன் பல தமிழ் படங்களின் நாயகர்களை போல் ஒரு இளைஞன். எதையாவது சாதித்தே தீரவேண்டும் என்று ஒரு வெறி கொண்டவன். மத்திய தர குடும்பத்தில் பிறந்தவன் ஆயிற்றே. எங்கும் தடைக்கற்கள். கற்களால் தடம் மாறி உலகத்தால் விழுங்கப்பட்டானா இல்லை மேலழுந்தானா என்பதை இயக்குனர் சிறிதும் செயற்கைத்தனம் கலக்காமல் சொல்லி இருப்பது தான் இந்த படத்தின் வெற்றி.

ஒரு ஆட்டோமொபைல் பொறியாளன். பலவித கார்களை டிசைன் செய்யும் திறமை உள்ளவன். செயல் வடிவம் கொடுக்க துடிப்பவன். பணத்திற்காக அலைபவன்.

அவனாலும், அவனை நோக்கியும் வீசப்படும் வஞ்சனைகளின் தொகுப்பே இத்திரைப்படம். வஞ்சனைகளின் காவியம் என்று சொல்லும் அளவிற்கு காட்சிகளை வடியமைத்த இயக்குனர் தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.

நாயகன் ஏறி இறங்கும் ஒவ்வொரு படியையும் நமது பார்வைக்குள் புகுத்தும் நுண்மையான கேமரா.

படிகளின் விளிம்புகளில் அடிபடும் விளிம்பு நிலை நாயகனின் தடுமாற்றங்களை மெல்லிய நகைச்சுவையுடன் கூறும் திரைக்கதை. Laughter of torture என்பதை விளக்க இனி உலகப்படங்கள் வேறெதுவும் தேவை இல்லை. போரிஸ் விஷ்மன் மற்றும் ரோபெர்டா பிண்ட்லையின் படைப்புக்களையும் தாண்டி.

இந்த படத்தில் வரும் இரு கதாநாயகிகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமா உலகில் நாயகிகள் என்றால் நடனம் ஆடவேண்டும் என்ற பார்முலாவை தகர்த்தெறிந்த கேரக்டர்கள்.

டேவிட்டின் லட்சியத்திற்கு ஊன்றுகோளாகி அவனை தனது பணத்தால் அடைய நினைக்கும் தீபா. பரந்த உலகத்தில் ஒரு கதவு மூடப்பட்டால் ஆயிரம் கதவுகள் நமக்காக காத்திருக்கும் என்பதை புரியவைக்க மஞ்சுளா. பெண்ணின் வாசனை நுகராத நாயகன். அவனைச் சுற்றி பெண்களால் கட்டப்படும் பல சிக்கலான முடிச்சுக்கள்.

கட்டுக்களை அவிழ்த்ததில் காட்டப்படும் surrealism நாம் தமிழ் சினிமா தான் பார்க்கிறோமோ என்ற அச்சத்தை வரவழைக்கின்றன.

ஆன்மீகத்தை, மதத்தின் சம்பிரதாயங்களை அதனுள் நம்பிக்கை கொண்ட நாயகனை வைத்தே எள்ளி நகையாடியுள்ள காட்சிகள் இயக்குனரின் சால்புகளை குறித்த பார்வையை பிரதியின் பிரதியாக வெளிக்கொணர்கின்றன. உதாரணத்திற்கு காரின் மேல் பற்றுள்ள நாயகன் டேவிட் காரை அக்னியாக பாவித்து தனது பற்றை தாரை வார்க்கும் திருமணக் காட்சி.

படத்தின் இசையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இசை. சூத்திரங்களின் மூலம் இசை அறிவு பெற்ற ஒருவனால் செய்தே இருக்கமுடியாது. எந்தவித இசையும் பயிலாத, இசையுணர்ச்சியும் அல்லாத ஒருவனால் மட்டுமே இவ்வுயரங்களை அடைந்து இருக்கமுடியும். தமிழ் இசையை, இந்திய இசையை உலகளவில் நிலைநிறுத்தும் முயற்சி. கட்டாயமாக பாராட்டப்பட வேண்டியது.

இந்த படத்தை முக்கியமான உலகத் திரைப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லாமல் தடுப்பது படத்தில் வரும் ஒருசில போதனைகள், தேவையற்ற துருத்தலாக. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் "திருடாதே" பட பாணியில். இவற்றை விட்டு மட்டும் இயக்குனர் மீண்டால் உலகத்திற்கு மற்றொரு ப்யுகோ கோவன்ச்க்கி ஜேம்ஸ் ஸ்டான்லி ரூபத்தில்.

(நடிப்பு பட்டறை நடத்துவதாக இப்படத்தின் நாயகன் சாம் ஆண்டர்சன் அறிவித்திருப்பது வளர இருக்கும் தமிழ் நடிகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.)

(ஒவ்வொரு மாதமும் உலகப்படம் காட்டி வரும் பைத்தியக்காரனிடம் ஓர் விண்ணப்பம். எந்தவொரு கலைப்படைப்பையும் நாம் அனுபவித்த பிறகே பிறருக்கு எடுத்துச்செல்லவும்/ நிராகரிக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களை முன்னிறுத்துவதில் நாம் நமது கடமையை தான் செய்து வருகிறோமா ? வரும் ஆகஸ்ட் மாத உலகத்திரைப்படமாக இத்திரைபடத்தை திரையிடுவதில் நமக்கு ஏன் தயக்கம் ? கிழக்கு மொட்டைமாடியில் பயங்கரவாத முதலாளித்துவத்தை தகர்த்தெறிந்தது போல் இத்தயக்கத்தையும் தகர்த்தெறிவோம்.)

Thursday, July 9, 2009

நான் பாஸாயிட்டேன்

இது எழுதாம தான் இருந்தேன். அம்மாஞ்சி மற்றும் ராப் மாதிரி முன்னணி எழுத்தாளர்களின் பதிவுகளை மட்டுமே படித்து வந்த எனது மனைவி திடீரென்று எனது பதிவையும் படிக்க ஆரம்பித்ததால் - பதிவின் மூலமாவது உன்னை பற்றி ஏதாவது தெரிந்து கொள்கிறேன் என்று கூறியதால் இப்பதிவு.

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ஐயப்பமலை போய் வந்த ஒரு குடும்ப நண்பர் சஜஸ்ட் செய்த பெயர். பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிச்சது இல்லை.

2.கடைசியாக அழுதது எப்போது..?
இந்த பதில் எழுதும் போது

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
லா லா லா லா லா

4.பிடித்த மதிய உணவு..
உணவு விஷயத்துல எனக்கு எல்லாமே பிடிக்கும். ரொம்ப பிடிச்சது உருளை மற்றும் வெஜிடபிள் ரைஸ்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நிச்சயமா.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டும் பிடிக்கும். கடல் ரொம்பவே பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
யோசிச்சி பார்த்தேன். ஒன்னுமே தோணலை.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - எனது கற்பனைகள்.
பிடிக்காத விஷயம் - ஓவராக சில ------- சமயங்களில் நான் செய்யும் ரகளைகள்.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : எல்லாமே
பிடிக்காத விசயம் : எதுவுமே இல்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமே பக்கத்துல இல்லையேன்னு தான்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
ப்ளூ

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
நேட்டிவ் இந்தியன் மியூசிக். பல தமிழ் பாடல்களை ஒருசேர கேட்கும் பீல் !! மியூசிக் டைரக்டர் பேரு சொன்னா ப்ருனோ தவிர மிச்சம் எல்லாரும் பிரச்சனை பண்ணுவாங்க.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ப்ரைட் கலர் எதுவானாலும்.

14.பிடித்த மணம்.
பசியோட வீட்டுக்கு வரும்போதும் மணக்கும் சமையல்.

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
நான் யாரை கூப்பிட்டாலும் அவங்க எழுத மாட்டாங்க. சரி அப்துல் கலாம், அமிதாப் பச்சன், கலைஞர் மற்றும் சாம்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
அதிஷாவோட பதிவுகளில் slum dog millionaire விமர்சனம். அதற்கு பிறகு அவர் எழுதிய பல பதிவுகள்.

17.பிடித்த விளையாட்டு...
எல்லா விளையாட்டும். இப்போதைக்கு புட்பால், ஐஸ் ஸ்கேடிங், skiing, டென்னிஸ், கோல்ப், cricket

18) கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
கொஞ்சம் நாளா எதுவும் பிடிக்கலை. முன்பு தெலுகு டப்பிங் படம் பிடிக்கும்.

20.கடைசியாக பார்த்த படம்..
ஆணிவேர். இந்த வருடத்தில் பார்த்த மூன்றாவது படம். ஆனால் இதை ஒரு திரைப்படமாக பார்க்க முடியவில்லை.

21.பிடித்த பருவ காலம்...
யூத்தாக உணரும் காலங்கள் யாவும்.

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
செம்பருத்தி - தி. ஜானகிராமன்
அரசூர் வம்சம் - இரா முருகன்
All The Rivers Run - Nancu Cato

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
13 நாட்களுக்கு ஒருமுறை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : நான் போடும் தாளம். எனது இனிமையான குரலில் ஒலிக்கும் பாடல்கள்.
பிடிக்காதது: உடனடியாக நிறுத்த சொல்லி வரும் கத்தல்கள்.

25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
USA - columbus, ohio

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
இல்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
பொறுப்புணர்வு.

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
எனக்குள் இருக்கும் தேவதையின் விரோதியா ? நானா ?

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
பார்சிலோனா

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
மகிழ்ச்சியா

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
கல்யாணம்.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
வாழ விருப்பப்படு.

திருடாதே பாப்பா திருடாதே

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டு தொழில் ஒழியாது என்பதை புரிய வாய்த்த சாம் ஆண்டர்சன்.



டாட்டா நேனோ காருக்கு போட்டியாக

Wednesday, July 8, 2009

அசர வைக்கும் சாம் ஆண்டெர்சன்

இந்த வார சனிக்கிழமை ஜூலை 11 அன்று "யாருக்கு யாரோ". காணத் தவறாதீர்.

கிச்சடி - Wimbledon மற்றும் Ashes

இந்த வாரம் விம்பிள்டன் பைனல் பார்த்தேன். கடந்த மூணு வருஷமா பைனல்ஸ் எல்லாம் 5 செட்டர் தான். ஒவ்வொரு வருஷமும் ரெண்டு டை-ப்ரேக்கர். ஆறு டைபிரேக்கர்லயும் ரோஜர் தான் ஜெயிச்சி இருக்கார். எனக்கு என்னவோ பெடரர் சர்வீஸ்ல அவ்வளவு நம்பிக்கை கிடையாது. பட் ரிசல்ட் வேறுவிதமா ப்ரூவ் பண்ணுது. நடால் விளையாடி இருந்தா இன்னும் கொஞ்சம் இண்டரச்டிங்கா இருந்து இருக்கும். அடுத்தமுறை வருவாரான்னு பார்க்கலாம்.


15 முறை கிராண்ட்ஸ்லாம் ஜெயிச்சி பெடரர், சாம்ப்ராஸ் ரிகார்ட பிரேக் பண்ணிட்டார். இவரோட era ல சாம்ப்ராஸ் விளையாடின போது இருந்த குவாலிட்டி அபோஷிஷன் இல்லைன்னு பரவலா எழுதப்பட்டு இருந்தது. எனக்கு என்னவோ அதுல உடன்பாடு இல்லை. சாம்ப்ராஸ் கூட பையோளின், சாங், டாட் மார்ட்டினுக்கு எதிரா நாலு பைனல்ஸ் விளையாடி இருக்காரு. அவர் காலகட்டத்துக்கும், பெடரர் காலகட்டத்துக்கும் உள்ள மேஜர் மாற்றம் சர்வீஸ்ன்னு நினைக்கறேன். அதுக்கு பால் சேஞ்ஜ் காரணமா இருக்கலாம் இல்லாட்டி கோச்சிங் காரணமா இருக்கலாம். யங் ப்ளேயர்ஸ் எல்லாரும் ஆறு இல்லாட்டி ஏழு வயசுலயே அகாடமி மூலமா டென்னிஸ் கத்துக்கும் போது தனித்தன்மைக்குரிய வாய்ப்புக்கள் கம்மி. பேஸ்லைன் கேம்க்கு முக்கியத்துவம் அதிகமாகும். அதிகமாயிடுச்சு. அதுல கேம் கொஞ்சம் ஸ்லோ ஆக தான் செய்யும். பட், இந்த வருஷம் டாமி ஹாஸ், பெடரர், ராடிக் கேம் பார்க்க சூப்பரா இருந்துச்சு. குறிப்பா ஹாஸ்.


இந்த தலைமுறை ப்லேயர்ஸ்ல ஏற்கனவே நடால் அண்ட் பெடரர் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபன் ஜெயிச்சுட்டாங்க. இனிமே வரவங்களும் ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்க்கறேன். முன்னாடி எல்லாம் பிரெஞ்சுன்னா லென்டல் - வில்லாண்டர் ,விம்பிள்டன்னா பெக்கர்-எட்பர்க்ன்னு இருக்கும். அதுக்கு பிறகு போன தலைமுறைல பிரெஞ்சு ஓபன் க்ளே கோர்ட் ஸ்பெஷலிஸ்ட் மட்டுமே ஜெயிச்சாங்க. விம்பிள்டன் சாம்ப்ராஸ், இவாநிசெவிக், க்ரேஜ்செக் மாதிரியான செர்வ் - வாலீ ஸ்பெஷலிஸ்ட் டாமினேஷன். இப்போ ஆல் அரவுண்ட் versatility. வுமன்ஸ் டென்னிஸ்ல இந்த மாற்றம் கொஞ்சம் முன்னாடியே நடந்துடுச்சு.


இங்கிலிஷ்ல தமிழ் வார்த்தைகள் டைப் பண்ணினா படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதே அளவு இதுவும் மோசமா இருக்கா ?


Ashes கிரிக்கெட் ஆரம்பிச்சுடுச்சு. விம்பிள்டன்ல முரே செமிபைனல், ஹெவிட் குவார்டர் பைனல். அதுனால Ashes ல இங்கிலாந்துக்கு வாய்ப்புக்கள் அதிகம். ப்ரீ-சீரியஸ் ஹைப் ரொம்பவே கலக்கல்.

ஆஸ்திரேலியா பவுலிங் எல்லாரும் புதுசு. ஸ்பின் பவுலர் இல்லை. Nathan Hauritz இந்தியாவுக்கு விளையாடின Noel David மாதிரி. பட், நிச்சயமா கிரேக் வைட் விட நல்ல பவுலர். ஸ்பின் பவுலர் சரியா ஹேண்டில் பண்ண கூடிய கேப்டன் யாரும் இல்லை போல. (ஸ்டேட் லெவல்ல). அடுத்த ஷேன் வார்னே வேண்டாம். அட்லீஸ்ட் டிம் மே மாதிரியாவது வரலாம். இந்த சீரியஸ்ல ஆஸ்திரேலியாவோட ஒரே நம்பிக்கை இங்கிலாந்து பேட்ஸ்மன் தான். இங்கிலாந்து பேட்ஸ்மன்ல எனக்கு peterson அண்ட் collingwood பிடிக்கும். collingwood இந்தியாவோட லக்ஸ்மன் மாதிரி. எவ்வளவு ரன் அடிச்சாலும் அடுத்த மேட்ச்ல உண்டா இல்லையான்னு மேட்ச் காலைல தான் தெரியும். ஐ ஹோப் ஆஸ்திரேலியா வின்ஸ்.


வயசான ரிட்டயர்மென்ட் அனவுன்ஸ் பண்றது அவசியம்ன்னு சொல்ற மக்களுக்கு - இதுவரை லக்ஸ்மன் ஒன் டே கிரிக்கெட்லேந்து ஓய்வுன்னு சொல்லலை. அவர் இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் விளையாடி ஆறு வருஷம் ஆகி இருக்கும்ன்னு நினைக்கறேன். ஸோ,

Friday, June 26, 2009

கிச்சடி - சிதைவுகள்

மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.

உரையாடல் சிறுகதை போட்டிக்கு ஒரு பிரபல பதிவரின் பதிவில் எனது சிறுகதையை பிரசுரித்துள்ளேன். பரிசு கிடைக்குமா ?

பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது என்று எழுதினால் நான் இந்துத்துவவாதியா ?

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இந்த குறளை படித்துவிட்டு அடுத்தவரை நாண வைப்பதற்காக நல்லவற்றை செய்ய ஆரம்பித்துள்ளேன். இது சரியா ?

சரி இல்லையென்றால் தவறா ?

தமிழில் ஒரு நல்ல ஆண்பெயர் கூறுங்களேன்.

பெயருக்கு மொழி உண்டா ?

மொழிக்கு பெயர் இருக்கும்போது பெயருக்கு மொழி இருக்கக்கூடாதா ?

வித்தியாசம் என்ற புதரில் என்றாவது அகப்பட்டதுண்டா?

பல்ப் பிக்ஷன் என்ற வகையறுக்கப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே எனக்கு படிக்க பிடிக்கறது. அப்படியென்றால் நான் வெகுஜன எழுத்தாளர்களை ரசிக்கும் இலக்கியவாதியா ?

கோர்வையற்ற எண்ணங்களை எழுத்தாக மாற்றும் இலக்கியவாதிகளிடம் ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம்.

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை பல லட்சங்கள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

நான் லீனியர் முறையில் எழுதப்படும் நாவல்கள், சிறுகதைகள் எப்படி படித்தாலும் புரியாதா ?

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை ஒரு லட்சம் காசுகள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?

முடியுமென்றால் எப்படி ?

பிரபலப்பதிவர் பலரின் பதிவுகளை படித்து அவற்றை பற்றி எழுதியும், அவற்றுக்கு தமிழிஷ்ல் வாக்களித்தும் வருவதற்கு பதிலாக கும்மாங்குத்து பதிவுகள் எழுதுவது மாதிரியாகவா ?

கடைசிப் பத்தியை எழுதாமல் இருந்து இருந்தால் இதை சிறுகதையாக அறிவித்து இருக்கலாமா ?

கதையின் முடிவில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்காவிட்டால் அது சிறுகதை என்ற இலக்கண வகையறையில் வராதா ?

இந்த சிறுகதை "உரையாடல்" அமைப்பின் சார்பாக நடைபெறும் போட்டிக்காக எழுதப்பட்டது.